மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டியில் விவசாயியான கோவில் பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவில்பிச்சை தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சிக்கும்போது, எதிரே வந்த லாரி திடீரென ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் பிச்சையின் மோட்டர்சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது.
இதனால் படுகாயம் அடைந்த கோவில்பிச்சையை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.