Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5ஆண்டு சிறை தண்டனை …. இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சுவலி ….!!

5ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டுள்ளது.

1991 – 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும்,  பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக நலத்துறை 1997ஆம் ஆண்டில் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில்    நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.இதில் ஐந்து பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். இதில் மூன்று நபர்கள் குற்றவாளிகள் என்று தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் குற்றவாளியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரியும், அடுத்ததாக அவருடைய கணவர் பாபுவும்,  மற்றொரு குற்றவாளியாக அரசு அதிகாரி சண்முகம் உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திரகுமாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், அவரின் கணவர் பாபுவுக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த சண்முகம் IASக்கு 3ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.  தண்டனை அறிவிக்கப்பட்டதும் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்திராகுமாரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டததால் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

Categories

Tech |