தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அது குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில் வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக நோய்தொற்று பரவக் கூடும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளித்துள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
வருகின்ற பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டை விதிமுறைகளை தவறாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.