சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வந்தபோது பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறிய பிறகு பேருந்தில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பேருந்தில் ஏன் திடீரென தீப்பற்றி எரிந்தது என்பது குறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.