காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ 500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர், ஏற்கனவே அருகில் இருந்த பள்ளி, அலுவலகம் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டது. தற்போது கீழ்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகம் இருந்த 49 கிரவுண்டு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 கோடி இருக்கும் என்றார்..
மேலும் சட்டப்படி ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் மீதம் இருக்கின்ற கிரவுண்ட் வெகுவிரைவில் இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றும். ஆன்மிகம் என்ற பெயரில் ஊடுருவ நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.