வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இதற்கு சரியான விளக்கத்தை தற்பொழுது வங்கிகள் அளித்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது எனவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான தகுந்த விளக்கம் வங்கி சார்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதில் தற்போது சமூக வலைதளங்களில் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப் போவதாகவும், அதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ஒரு கருத்தும் பரவிவருகிறது. அது முற்றிலும் வதந்தியே தவிர உண்மையான கருத்துக்கள் அல்ல, அந்த வகையான அறிவிப்புகள் ரிசர்வ் வங்கி சார்பிலும் மத்திய அரசின் சார்பிலும் இதுவரை வெளியாகவில்லை என்று அது தெரிவித்துள்ளது.