Categories
அரசியல்

அதிமுக செஞ்சது வேற…. திமுக செஞ்சது வேற…. வேறுபாட்டை குறிப்பிட்ட திருமா …!!

அதிமுக தீர்மானம் தான் நிறைவேற்றியதே தவிர மசோதாவை நிறைவேற்றவில்லை,  திமுக சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார்.

நீட் தேர்வு நிலைப்பாடு குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  இரட்டை நிலைப்பாடு இல்லை. ஒரு நம்பிக்கை மக்களுக்கு வந்து நீட் தேர்வால் இருக்கின்ற அச்சத்தைப் போக்குவதற்காக சொல்லப்பட்ட கருத்து. விடுதலைசிறுத்தைகளும் தான் சொல்லியிருக்கிறது நீட் கூடாது என்று ஆனால் எல்லாவற்றிலும் ஒரு முறை இருக்கிறது. சட்டத்தை நாம் மசோதாவை நிறைவேற்ற முடியும், சட்டமாக்குகின்ற பொறுப்பு குடியரசுத் தலைவரிடம் தான் இருக்கிறது. ஆகவே திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை போல கூடாது என்கின்ற அடிப்படையில் தான் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வந்திருக்கிறது.

அதிமுக சட்டப்பேரவை தீர்மானம் தான் நிறைவேற்றியதே தவிர மசோதாவை நிறைவேற்றவில்லை. ஆனால் திமுக சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. இப்போது குடியரசுத் தலைவர் பொறுப்பு. அவர் உடனடியாக அதிலே கையொப்பமிட வேண்டும் காலம் தாழ்த்துவது, கையொப்பம் இடுவார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் கவனத்திற்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் இதை கொண்டு சேர்ப்போம்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றதோ, அத்தனை அளவிற்கு காரணங்கள் தொழிலாளர் சட்டங்களை எதிர்ப்பதற்கு உள்ளன. அவ்வளவு மோசமான மக்கள் விரோத சட்ட தொகுப்புதான் தொழிலாளர் சட்டங்கள். எனவே அதையும் கடுமையாக எதிர்ப்போம். தமிழக அரசின் பார்வைக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கொண்டுபோய் சேர்ப்போம். சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்போம்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இருக்கின்ற பிரச்சனை திமுக அரசு வந்த பிறகு உருவாகக்கூடிய பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனைகளுக்கு தேசிய அளவில் தீர்வு காண வேண்டிய தேவை இருக்கிறது. மாநில அரசுக்கு அதில் பொறுப்பு இருந்தாலும் கூட தேசிய அளவில் ஒன்றிய அரசு கையாண்டு வருகின்ற கார்ப்பரேட் தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் தான் இந்த மாநில அரசுகளில் நிலவுகின்ற பிரச்சனைகளுக்கும் காரணங்களாக இருக்கின்றது. எனவே இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டி இருக்கிறது.தமிழக அரசின் பார்வைக்கு நாங்களும் இதை எடுத்துச் செல்வோம் என திருமாவளவன் கூறினார்.

Categories

Tech |