Categories
அரசியல் தேசிய செய்திகள்

அண்ணே…! இப்படி பண்ணாதீங்க…. ஒழுங்கா அங்க போடுங்க…. தமிழிசை அட்வைஸ்…!!!

புதுச்சேரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் ஊர்ஊராக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியாங்குப்பம் தொகுதி ஆர்.கே நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார். இதற்கு முன்னதாக தமிழிசை சௌந்தர்ராஜன் வருகை தந்த போது பேப்பர் ஒன்று பறந்து விழுந்துள்ளது. அதனை அருகில் இருந்தவர் தூக்கி வீசியதைப்பார்த்த தமிழிசை அதைக் குப்பைத் தொட்டியில் போடுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து அவருக்கு ஒருவர் சால்வை அணிவித்த போது மீண்டும் குப்பை பேப்பர் விழுந்துள்ளது. அதை அவரே குனிந்து எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.

Categories

Tech |