Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு விசா மறுப்பு…. கண்டனம் தெரிவித்த இந்தியா தூதர்…. பேட்டி அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விசா வழங்க சீன அரசு மறுப்பு தெரிவித்ததை குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் இருந்து மாணவர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் என அனைவரும் இந்தியா திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவர்கள் தற்போது சீனா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சீன அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் விடுத்த கண்டனம் குறித்து சீனாவின் வெளியுறவு துறை அமைச்சரான ஷிவா சுன்யிங் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “கொரோனா பரவல் இன்னும் நாடு முழுவதும் இருந்து வருகிறது. எங்கள் சட்டத்தின் படியும் அறிவியல் சார்ந்தும் கொரோனா  விதிமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். மேலும் இந்தியர்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளது எந்தவித உள்நோக்கமும் இல்லை. இந்த கட்டுப்பாட்டு விதிகளானது நாடு திரும்பும் சீன குடிமக்களுக்கு பொருத்தமாகும். மேலும் இந்த கட்டுப்பாடுகளை தற்போது அகற்றுவதற்கு எந்தவித முடிவும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |