புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள காவல் நிலையத்தில் அன்பழகன் என்பவர் பணியாற்றி வந்தார். நெமிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பசுரேஷ் என்பவர் மணல் கடத்தல் தொழில் செய்பவர். இவருக்கும் போலீசார் அன்பழகனுக்கும் ஏற்கனவே முன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று கீரனூர் பகுதியில் போலிஸ் அன்பழகன் ரோந்து பணிக்கு சென்ற போது, இன்பசுரேஷ் தனது கூட்டாளி முகேஷ், சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 4 பேரும் அன்பழகன் அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது அன்பழகன் போதையில் தனது வாக்கி டாக்கியை தவறவிட்டார்.
அதன் பின்னர் அந்த மணல் திருட்டு திருடர்கள் அவர் வாக்கி டாக்கி எடுத்து சென்று தலைமறைவாகி விட்டனர். அன்பழகன் போதை தெளிந்த நிலையில் வாக்கி டாக்கியை தவறவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் அன்பழகனை மதுவை குடிக்க வைத்து வாக்கி டாக்கியை திருடிச் சென்றதாக தெரியவந்தது.
இதையடுத்து மணல் திருடர்கள் 4 பேரையும் போலீசார் வாக்கி டாக்கி உடன் கைது செய்தனர். அதனைப்போலவே அன்பழகன் பணியில் இருக்கும்போது மது அருந்தியது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், அன்பழகன் போதையில் வாக்கி டாக்கியை தவறவிட்டதால் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.