சல்மான்கானுடன் எஸ்பிபி அவர்கள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்திய திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளரும் ஆவார். அவர் மறைந்தாலும் அவருடைய இசை மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது முதல் நினைவு நாளை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்கள்.
இந்நிலையில், நடிகர் சல்மான்கானும், எஸ்பிபியும் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சல்மான்கானின் ஹிந்தி படத்திற்காக எஸ்பிபி பாடிய போது எடுத்தது.