Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு…. கத்தியால் மிரட்டிய ஓட்டுநர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

பெட்ரோல் நிலையத்தில் இரண்டு ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ காட்சி வலைத்தளத்தில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

அந்த சமயம் 2 ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கோபத்தில் ஒருவர் கத்தியை எடுத்து தாக்க முயன்ற போது மற்றொருவர் காரில் தள்ளிவிட்டு செல்லும் வீடியோ வெளியாகி மக்களின் உணர்வுகளை வெளிகாட்டியுள்ளது.

மேலும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டதோடு பள்ளிக்கு ஆசிரியர்கள் வர முடியாததால் மீண்டும் ஆன்லைன் வகுப்புக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவைகளுக்கு பெட்ரோல் வழங்குவதில் முன்னுரிமை வழங்கும்படி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் 24 மணி நேரமாக நடந்த வாக்குவாதத்தில் ராணுவ வீரர்கள் ட்ரக்குகளை இயக்க அமைச்சர்கள் அனுமதியளித்தனர். மேலும் 150 இராணுவ வீரர்களுக்கு டேங்கர் லாரி ஓட்டுவதற்கு பயிற்சி வழங்க உள்ளனர். இந்த சூழலால் கிறிஸ்துமஸ் காலத்தில் அத்தியாவசிய  பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |