Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கிடையே நடந்த தகராறு…. குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

3 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் விக்னேஷ் என்பவர் தனது மனைவி காமாட்சியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமாட்சி விக்னேஷை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன், அண்ணாமலை நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென குழந்தை பிரியதர்ஷினிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த காமாட்சியும் மற்றும் அவரது குடும்பத்தினரும் குழந்தையை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த விக்னேஷ் தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பேரில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தையின் தாயான காமாட்சியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது முன்தினம் இரவு குழந்தைக்கு ஆம்லெட் மற்றும் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார். இதன் காரணமாக குழந்தை உயிர் இழந்திருக்கக் கூடுமோ? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |