கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்பயா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் துறையில் நிர்பயா பிரிவு என்பது உள்ளது. இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மும்பையின் பகுதியில் உள்ள கடற்கரையில் ஒரு பெண் அழுதுகொண்டே செல்வதாக உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிர்பயா பிரிவினர் அங்கு செல்வதற்குள் அந்த பெண் கடலில் குதித்துள்ளார்.
உடனடியாக கடலில் குதித்த நிர்பயா பிரிவு போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தற்கொலை குறித்த காரணத்தை அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், கணவன் மற்றும் 4 வயது குழந்தையை வீட்டில் வைத்து பூட்டி விட்டு தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடற்கரைக்கு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.