Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

நானும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளரும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தடுப்பூசிகள் குறித்து பேச உள்ளோம். வாரம் தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை மத்திய அரசு நிறைவேற்றுமானால், இந்த வாரமும் நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதை ஒரு தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினர். மதியம் 12 மணிக்கு எல்லாம் நிர்ணயித்த இலக்கை கடந்து, தடுப்பூசிகள் போதவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் போட சொல்லவில்லை. அப்படி சொன்னாலும் அது தவறில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |