Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

அதனால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களுக்கும் ஏசி பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 அரசு பேருந்து கழகங்களிலும் 700 ஏசி பேருந்துகள் உள்ளன. அதில் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 340 ஏசி பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மேலாக ஏசி பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது அக்டோபர் 1 முதல் ஏசி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குளிர்சாதன பேருந்துகளை தயார் செய்யும் பணியில் போக்குவரத்து பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மீண்டும் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்க அறிவிப்பு வந்த பின்னர் போக்குவரத்து பணிமனையில் உள்ள குளிர்சாதன பேருந்துகள் போக்குவரத்து துறை பணியாளர்கள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தும்,பேருந்துகளில் உள்ள பயணிகளின் இருக்கைகளில் கிருமிநாசினி தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |