இணையத் தளத்தில் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம் என்று திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in, www.tncsc.edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய முன்பதிவு செய்யலாம்.இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.