திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வரும் குற்றங்களை தடுக்க போலீசார் வாகன சோதனை நடத்தி வருவது மட்டுமல்லாமல் புள்ளிங்கோ இளைஞர்களை பிடித்து எச்சரித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவ்வபோது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அந்த இளைஞர்கள் காதுகளில் கம்மலை மாற்றிக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வெட்டிக் கொண்டு முடியை கலரிங் செய்து இருப்பது தெரிந்தது. அதனைக் கண்டு ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், உடனே காதுகளில் போட்டிருந்த தோடுகளை கழட்ட சொல்லியும்,அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லியும் அனுப்பி வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல்லில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி,கலர் அடிக்க கூடாது என்று சலூன் கடைக்காரர் களுக்கு திண்டுக்கல் நகரை இன்ஸ்பெக்டர் உலகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டினால் சலூன் கடை காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.