Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பிரச்சனைகள் சரியாகும்….! நிம்மதி கூடும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் சரியாகும். 

இன்று தீவிர தெய்வபக்தி ஆழ்மனதிற்குள் நிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளரின் ஆதரவு கிடைக்கும். தொழில் பற்றிய எண்ணங்கள் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் அல்லது கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும். அதனை சரிசெய்து கொள்ளவேண்டும். இறைவனை பரிபூரணமாக நம்பி உங்களுடைய குறைகளை சொல்லி விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் சரியாகும். அவசரம் காட்ட வேண்டாம். கண்டிப்பாக அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் பக்குவமாக பார்த்து பேசி பழக வேண்டும்.

கோபமான பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். சந்திராஷ்டமம் தினம் இருப்பதினால் வீண் வம்பிற்கு செல்லாமல் இருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். காதலில் பிரச்சினைகள் இருக்காது. சின்ன பிரச்சனைகளை பெரிதுபடுத்த வேண்டாம். மாணவர்களுக்கு குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். கல்வி பற்றிய பயம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 4                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை

Categories

Tech |