Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட…. பேருந்துகள் மீண்டும் இயக்கம்…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்திற்கு திமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புதிய  பேருந்துகளை வாங்குவதற்கும் அரசு  திட்டமிட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவோம் என்று ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |