சுவிட்சர்லாந்தில் முகாமில் தங்கியிருந்தவர் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பெர்ன் மாநிலத்தின் Loucherhorn பகுதியில் முகாம் அமைத்து ஒரு நபர் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதலில் அவர் பிணமாக கண்டுபிடிக்கபட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து தற்போது விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களையும், விபத்துக்குள்ளான அந்த நபர் யார்? என்பதை கண்டறியவும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணைக்கு பிறகே அவர் பெயர், புகைப்படம் போன்ற தகவல்கள் வெளியிடப்படும் என பெர்ன் மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர்.