Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கொழுத்த போகும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் .

Image result for வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் , கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை ,  திருச்சி , பெரம்பலூர் , அரியலூர் , கடலூர் , மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,  அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |