தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடனில் முறைகேடு நடந்துள்ளது. அதில் ஒரு நபர் மட்டும் தலா 600 க்கு மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கவரிங் நகை மோசடி நடந்திருக்கிறது. இந்நிலையில் மோசடி செய்யும் நபர்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடையும் விதமாக தமிழக அரசு தனியாக குழு ஒன்றை அமைத்ததுள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் 5 சவரன் நகைக்கடன் மற்றும் அனைத்து பொது நகைகடன்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட விவரங்களை சேகரித்து வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து முந்தைய ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடியில் பல முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. அதனைப்போலவே நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடக்க விடக்கூடாது என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.