எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வெப்சீரிஸின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குஷி, வாலி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதை தொடர்ந்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார். கடைசியாக இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த வெப்சீரிஸின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வெப் சீரிஸ் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.