Categories
Uncategorized தேசிய செய்திகள்

கமலேஷ் திவாரி உடற்கூராய்வின் அதிர்ச்சித் தகவல்…..!!

 இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவர் கமலேஷ் திவாரி உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமேலேஷ் திவாரி, கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. அவரின் எலும்புகள் மற்றும் மார்புகளிலும் கத்தி இறங்கியிருந்தது.இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டதாக ஹூசேன் ஷாஜீர்ஹீசேன் சேஷ் (34), மொய்னுதீன் குர்ஷீத் பதான் (27) ஆகியோரை தீவிரவாத தடுப்பு படை (குஜராத்) சூரத்தில் கைது செய்தது.

Image result for கமலேஷ் திவாரி

இவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கமலேஷ் திவாரியின் உடற்கூராய்வறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கமலேஷ் திவாரியின் உடலில் 15 இடங்களில் அதிபயங்கர கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for கமலேஷ் திவாரி

மேலும் அவரின் உடலில் துப்பாக்கி தோட்டாவும் ஒருமுறை துளைத்துள்ளது.உத்தரப் பிரதேசத்தில் இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவருடைய படுகொலை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக இதுதொடர்பாக பேட்டியளித்த அம்மாநில போலீஸ் உயர் அலுவலர், இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் இருவர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றும் கூறியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

Categories

Tech |