தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் மருத்துக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் , இதில் மத்திய அரசு 195 கோடியும் , மாநில அரசு 130 கோடியும் ஒதுக்கீடு செய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 மருத்துவ சீட்_டுகள் கிடைக்கும் மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.