Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கூலிப்படைக்கு முற்றுப்புள்ளி…. டி.ஜி.பி சைலேந்திர பாபு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதி வெறியால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று நெல்லைக்கு வந்ததை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள கூட்டரங்கில் நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்மண்டல ஐ.ஜி அன்பு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், டி. ஐ.ஜி.பிரவீன்குமார், அபிநபு மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நெல்லை ,பத்ரி நாராயணன் கன்னியாகுமரி, ஜெயக்குமார் தூத்துக்குடி போன்றோருடன் ஆலோசனைகள் நடந்தது. அப்போது தென்மாவட்டங்களில் சாதி மற்றும் முன் விரோதம் காரணமாக கொலைகள் அதிகரித்து வருகின்றது.

அதனை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பின்னர் டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம்  பேசியதாவது, தென் மாவட்டங்களில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை நடைபெற்ற கொலைகளுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் கொலைகள் நடக்கிறது அதில் நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் இந்தக் கொலைகளை தடுக்கும் வகையில் அதிகமான காவல்துறையினரை காவலுக்காக போடப்பட்டு, அதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது கடந்த 48 மணி நேரத்தில் ரவுடிகளை ஒழிப்பதற்காக ஆபரேஷன் டிஸ் ஆர்ம் சோதனையின்போது 16 ஆயிரத்து 370 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டன.

அதில் 2 ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 734 ரவுடிகளிடம் இருந்து 8 துப்பாக்கிகள் 934 கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கூலிப்படைகளை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன் கூலிப்படையினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அவர் கோரியுள்ளார். மேலும் பழிவாங்கும் நோக்கத்துடன் நடைபெறும் கொலைகளுக்கு கடுமையான தண்டனைகள் வாங்கித் தர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகின்றது.

இந்த கொலை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கூலிப்படையினரை காவல்துறையினரால் கண்காணிக்க படுவார்கள். மேலும் துப்பாக்கி கலாச்சாரம் ஆனது தமிழகத்தில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் டி.ஜி.பி சைலேந்திரபாபு பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த காவல்துறையினரிடம் குறைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.

Categories

Tech |