Categories
மாநில செய்திகள்

மன்மோகன் சிங் பிறந்தநாள்…. முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்ட உங்களின் மகத்தான சேவைக்கு பாராட்டுகள். பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் நீங்கள் வகித்த முக்கிய பங்கை யாராலும் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |