Categories
உலக செய்திகள்

வாக்கு சேகரிக்க சென்ற சான்ஸ்லர்…. கையில் கடித்த கிளி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

ஏஞ்சலா மெர்க்கலின் கையில் பறவை பூங்காவில் உள்ள கிளி ஒன்று கடித்ததால் அவர் அச்சத்தில் அலறியுள்ளார் 

ஜெர்மனியில் 16 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த ஏஞ்சலா மெர்க்கல் பதவியில் இருந்து விலகுவதால், தற்போது அந்நாட்டுக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துள்ளது. மேலும் நேற்று ஜெர்மனியில் பொது தேர்தல் நடை பெற்றுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் ஜெர்மனியை சேர்ந்த ஏஞ்சலா மெர்க்கல் கிறிஸ்டின் டெமாக்ரடிக் யூனியனுக்கு கூட்டணியாக இருக்கும் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி பெறலாம் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் எஸ்.சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரான Olaf Scholz என்பவர்தான் ஜேர்மனியின் அடுத்த சான்செலராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏஞ்சலா மெர்க்கல் தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏஞ்சலா மெர்க்கல் 1990 தான் முதன்முதலில் போட்டியிட்டு வந்த Mecklenburg western- pomerania தொகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அதன்பின் அந்த பகுதியிலுள்ள பறவைகள் பூங்காவிற்கு சென்று அங்கு சிறிது நேரத்தை கழித்துள்ளார். அப்போது அங்குள்ள ஆஸ்திரேலியாவின் ஹலோ ரிகெட்ஸ் வகை கிளிகளுக்கு அவர் தனது கைகளால் தானியங்களை வழங்கியுள்ளார்.

அந்த சமயத்தில் கிளிகள் ஏஞ்சலா மெர்க்கலின் தலை, தோள்பட்டை, கைகளில் அமர்ந்துள்ளது. இதனால் ஏஞ்சலா மெர்க்கல் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் கிளி ஒன்று ஏஞ்சலா மெர்க்கல் அவர்களின் கைகளை கடித்துள்ளது. அப்போது அவர் அச்சத்தில் அலறியுள்ளார். இதனால் அவரின் முகத் தோற்றமே மாறியுள்ளது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அங்குள்ள பொதுமக்களுடன் அவர் செல்பி எடுக்கும் போதும் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

Categories

Tech |