Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் புதிய கட்டுப்பாடு…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள  நிலையில், ரயில் சேவை தொடங்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் ரயில் நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே, பாதுகாப்பு பயிற்சி மைதானத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் 36 வது ஆண்டு எழுச்சி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மண்டல தலைமை துணை ஆணையர் லூயிஸ் அமுதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா காலத்திலும் முன்கள பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிலையங்களிலும் தானியங்கி சானிடைசர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் வரக் கூடாது. முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்தில் யாரேனும் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |