ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் மனுக்கள் நியாயமற்ற காரணங்களுக்காக திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர்கள், உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து வக்கீல் தரப்பில் கூறியதாவது, தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தோம்.
அதை முழுமையாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி அவரிடத்தில் ஒப்புதல் பெற்று விளக்கம் கேட்டு, அந்த விளக்கத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். வேட்பு மனு தாக்கலின் போது இவ்வளவு பெரிய சதிகளும், திட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நிச்சயமாக இந்த தேர்தல் உள்ளாட்சி தேர்தல் நல்ல முறையில் நடந்து முடியும் என்ற எண்ணம் அதிமுகவிற்கு இல்லை. காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு இந்த தேர்தலை எப்பாடுபட்டாவது வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே முறை முனைப்போடு இருக்கிறது. எனவே உள்ளாட்சித்தேர்தல் நிச்சயமாக நியாயமாக நடக்கக்கூடிய தேர்தலாக இருக்காது என்பதை திண்ணமாக முடியும் என்று கூறியுள்ளது.