Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழின் முதல் HORROR…. இதுவே பேய் படங்களுக்கு முதல் படி…. இப்போ பார்த்தாலும் அரண்டுவிடுவோம்….!!

தமிழ் திரையுலகில் ஏராளமான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காதல், சண்டை, காமெடி, நட்பு என ஒவ்வொன்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முடிவு செய்து பயத்தை கொடுக்கும் பேயை மையமாக வைத்து படங்களை இயக்கத் தொடங்கினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பேய் படங்கள் எடுக்கப்பட்டது.

அதற்கு எடுத்துக்காட்டாக ராகவா லாரன்ஸின் முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என அடுத்தடுத்த பாகங்களை அவர் இயக்கினார். அதேபோன்று சுந்தர் சி தனது பங்கிற்கு அரண்மனை, அரண்மனை – 2 என அடுத்தடுத்த பாகங்களை இயக்கியுள்ளார். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் ரசிகர்கள் மத்தியில் பெய்படம் வெற்றியை பெற்றது.

ஆனால் தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளியான பேய் படம் எது என்பது பலருக்கும் தெரியாது. அது மர்மயோகி எனும் திகில் படம் யுஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட அந்தப் படம் இப்போது பார்த்தாலும் பயம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு திகில் நிறைந்த படமாகவே அமைந்துள்ளது. அதனை ஆரம்பமாக கொண்டு தான் தற்போது பல பேய் படங்கள் வெளியாகி வருகின்றது.

Categories

Tech |