சுபஸ்ரீ மரணத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறல் பேனர் தொடர்பான டிராபிக் ராமசாமி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதில் சுபஸ்ரீ வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை , அதன் விசாரணை தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சுபஸ்ரீயின் ரவி என்பவர் சுபஸ்ரீ மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் , சம்பந்தப்பட்ட பள்ளிக்கரணை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , விசாரணை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும், விதிமீறல் பேனர்களை தடுப்பதற்கு அதிகபட்ச தண்டனை விதிக்கும் வகையில் ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று உள்ளடக்கி மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் , சேசாயி அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது விசாரணைக்கு வந்த போது எந்த அடிப்படையில் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சொல்கிறீர்கள் , முதற்கட்ட இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கியும் கூடுதலாக 1 கோடி ரூபாய் கேட்கிறீர்களே ? கூடுதல் இழப்பீடு வேண்டும் என்றால் மோட்டார் வாகன தீர்ப்பாயம் போன்ற அமைப்பை நாடலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.மேலும் இது தொடர்பாக தமிழக அரசும் , சென்னை மாநகராட்சியும் பதிலளிப்பதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.