Categories
தேசிய செய்திகள்

கொட்டும் மழையில் நாய்களுக்கு குடை பிடித்த போலீஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மழையில் நனையும் நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவை சேர்ந்த டிராபிக் கான்ஸ்டபிள் தருண் குமார் மண்டல் என்பவர் கன மழை பெய்த சமயத்தில் அந்த மழையில் நனைந்து கொண்டிருந்த இரு நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் டிராபிக் காவலரின் அற்புதமான செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் எண்ணற்ற கமெண்ட் மற்றும் லைக்களையும் இந்த புகைப்படம் பெற்றுவருகிறது. மழை வெயிலை பொருட்படுத்தாமல் பணியாற்றும் கொல்கத்தா போலீஸ் விலங்குகளிடம் இவ்வளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதையும் பலர் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை கவனித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மஹாபுஜ் அலி இதனை கார்ட்டூன் புகைப்படமாக வரைந்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |