அதிமுக தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
விதிமீறல் பேனர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சுவாதி மரணம் தொடர்பாக அனைத்து விளக்குகளையும் சேர்த்து உயர் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் இதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது விதிமீறல் பேனர் வைத்தது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? சுபஸ்ரீ விசாரணை குறித்து என்ன முன்னேற்றம் ? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒரு வழக்குக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் விசாரணை நடைபெற்றுள்ளது வருகின்றது விரைவில் விசாரணையின் முழு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றோம் என்று தெரிவித்ததை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் விதிமீறல் பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக மட்டும்தான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது மற்ற தவிர எந்த கட்சியும் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதோடு ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்வி எழுந்ததும் அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் அதகிமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கக்கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய உத்தரவு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 22 ஆம் தேதி ஒத்தி நீதிபதி ஒத்திவைத்தார்.