Categories
உலக செய்திகள்

கைபேசியால் தாக்கியதில்… உயிரிழந்த காதலன்… சிறைக்குச் சென்ற காதலி…!!

திடீரென ஏற்பட்ட கோபத்தினால் காதலன் மீது கைபேசியை தூக்கி எறிந்த காதலி சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினா நாட்டில் ரோக்ஸானா அடெலினா லோபஸ் என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக லூயிஸ் டாரியோ குவான்டே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காதலன் லூயிஸ் காதலி ரோக்ஸானாவை முதலில் தாக்கியுள்ளார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ரோக்ஸானா பதிலுக்கு தன் கைபேசியால் காதலனின் நெற்றிப் பொட்டில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் காதலனின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு  ஏற்பட்ட தலைவலியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி தீடிரென உயிரிழந்துள்ளார். இதனால் லூயிஸின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் ரோக்ஸானா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இளம்பெண் ரோக்ஸாசானாவுக்கு ஏற்பட்ட கோபத்தின் விளைவாக அவர் மீது கொலைகுற்றச்சாட்டு சுமத்தப்படவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |