Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெருங்கி வரும் தேர்தல்… அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்காக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 33 வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 111 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் கலந்துகொண்டுள்ளார்.

இதேபோல் சத்திரக்குடி பகுதியில் உள்ள ஓட்டமடம் காளியம்மன் கோவில் சமுதாய கூடத்தில் நடைபெற்ற பயிற்ச்சி முகாமில் 88 வாக்குசாவடிகளில் பணிபுரியவுள்ள 264 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து தேர்தல் அலுவலர் ராஜேந்திரபிரசாத், துணை அலுவலர் பழனி, போகலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |