Categories
உலக செய்திகள்

துருக்கி இராணுவ முகாம்…. ஏவப்பட்ட ஏவுகணைகள்…. வெளிவராத பாதிப்பு தகவல்கள்….!!

துருக்கி ராணுவ முகாம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் வடக்கு மாகாணமான துருக்கி ராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது நினிவேயிலுள்ள இந்த ராணுவ முகாமுக்கு அருகில் சுமார் 5 ஏவுகணைகள் விழுந்தது. இதில் 3 ஏவுகணைகள் வெடித்து சிதறியது, மற்ற 2 வெடிக்காமல் இருந்தது என பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை வெளிவந்தது. இவ்வாறு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை .

இதனையடுத்து குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் அதனுடன் தொடர்புள்ள குழுக்களை எதிர்த்து போராட துருக்கிய இராணுவம் வடக்கு ஈராக்கில் இயங்கி வருகிறது. 1980ஆம் ஆண்டு முற்பகுதியில் இருந்து துருக்கியில் குர்திஷ் சுயாட்சியை நிறுவ முயற்சி செய்து வரும் இந்த தொழிலாளர் கட்சிக்கு எதிராக அந்நாட்டு அரசு போராடுகிறது. அதன்பின் 2013-ல் pkk மற்றும் துருக்கி இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனாலும் pkk போராளிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பல தாக்குதல்களால் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் முறிந்து விட்டது.

Categories

Tech |