ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு ஐந்தாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு முதலில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கப்பட்டது. ஜூன் 28-ஆம் தேதி பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து ஜூலை 28 வரை மேலும் ஒரு மாதத்திற்குள் பரோல் நீட்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அவருடைய பரோல் காலம் மேலும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அவரது பரோல் காலம் விரைவில் முடிவடையும் நிலையில் ஐந்தாவது முறையாக மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.