Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு எங்களிடம் சண்டை போடுகிறது….. கர்நாடகா பகிரங்க குற்றச்சாட்டு…!!!!

மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே முன் அனுமதி இல்லாமல் அணை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ள பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அணை கட்ட படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு ஆய்வுக் குழுவை கலைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இத்தகைய குழு இருப்பது மிகவும் அவசியம் என்று கேட்டுக்கொண்டது.

வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது கர்நாடக அரசின் சார்பில் நதி நீர் சார்ந்த எல்லா பிரச்சினைகளையும் பசுமை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் தீர்வு காண வேண்டுமென்றால் அது பெரும் பிரச்சினையை உருவாக்கும் என்றும் தமிழக அரசு அத்தகைய சண்டையை தான் நடக்கிறது. என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது அதிகார வரம்பை மீறி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதாக வாதாடி உள்ளது. வாதங்களைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தற்போதைக்கு தாங்கள் எந்த உத்தரவையும் போவதில்லை எனவும், விரிவான விசாரணை நடத்துவதாகவும் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Categories

Tech |