உன்னை சந்தித்த பின் என் வாழ்வின் இனிய தருணங்கள் என ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரவுக்கு நன்றி தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தங்கமே என்று உருகியுள்ளார்.
நயன்தாரவுடன் ரொமாண்ஸ் மோடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் ரிலீஸாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இவரது சினிமா கேரியரில் சிறந்த படம் என இவருக்கு பெயர் பெற்று தந்த இப்படத்தை நினைவுகூர்ந்த விக்னேஷ் சிவன், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Life started from here😇 thank u @VijaySethuOffl sir 🤗
my thangamey #Nayanthara 😘😍my king @anirudhofficial
My dearest friends @george_dop @dancersatz @RJ_Balaji @dhilipaction #Dhanush sir @wunderbarfilms @LycaProductions &every single person who gave me this second chance😇 pic.twitter.com/AXzTKQ03or— VigneshShivan (@VigneshShivN) October 21, 2019
இது ஒரு புறம் இருக்க, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் ரொமாண்ஸ் மோடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, என் தங்கமே, உன்னை சந்தித்த பின் என் வாழ்கையில் இனிய தருணங்கள்தான். இந்த நாளை ஏற்படுத்தியதற்கு நன்றி. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்தது மட்டுமல்லாமல் அருமையான வாழ்கையும் தந்துள்ளாய். இந்த அற்புதமானவரை உள்ளேயும், வெளியேயும் என்றும், எப்போதும் மறக்கமாட்டேன். அன்புடன் #nayanthara , #NRD , #4years , #naanumrowdydhaan , #lifesaver , #blessed என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B34Wq7Ah43q/?utm_source=ig_web_copy_link
முன்னதாக, ட்விட்டரில் நானும் ரவுடிதான் குறித்து நினைவுபடுத்தியிருந்த விக்னேஷ் சிவன், பின்னர் இன்ஸ்டகிராமில் நயன்தாராவை குறிப்பிட்டு இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே இந்தப் படத்தில் பணியாற்றியபோதுதான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பழக்கம் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.