இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லும் பொழுது அவருடன் ஆட்டுக்குட்டியும் பின்னாலே செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதியில் ஒரு சிறுமி பள்ளி சீருடையில் நடைபாதையில் நடந்து செல்கிறார். அந்த சிறுமியின் அருகில் ஒரு வெள்ளை ஆடானது சிறுமி நடையை வேகத்தினால் ஆடு பின்னாலேயே ஓடத் தொடங்குகிறது. எங்கு சென்றாலும் உன்னை பின் தொடர்வேன் என்று சொல்லும் படி அந்த ஆடானது சிறுமி கூடவே பயணம் செய்கின்றது.
Two friends going to school in #HimachalPradesh ❤ pic.twitter.com/BzbhdouvHk
— Dr. Ajayita (@DoctorAjayita) September 20, 2021
இந்த வீடியோவை மருத்துவர் அஜயிதா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவு எப்பொழுதும் வரையறுக்க முடியாது என்று அந்த வீடியோ மிகவும் ரசிக்கும்படி உள்ளது.