Categories
அரசியல்

இது வேற லெவல்ல இருக்கே…. எடப்பாடியின் “காலில் விழுந்து”…. வரவேற்ற ராஜேந்திர பாலாஜி…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற, எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் கிளம்பி சென்றது. அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் “முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாளர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர், ஆதரவாளர்கள் ஆகிய இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியின் போது ராஜேந்திர பாலாஜி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |