Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ணனை இந்தப்படம் மிஞ்சும்…. பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய ராதாரவி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

திரௌபதி படத்திற்கு பிறகு ரிஷி ரிச்சர்ட் நடித்து மோகன் ஜி இயக்கி உருவாகியுள்ள படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மனோபாலா, தம்பி ராமையா என பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பேசிய ராதாரவி படத்தில் இயக்குனர் நியாயமானதை பேசி இருக்கிறார். யாருடைய மனதையும் அவர் காயப்படுத்தவில்லை. மற்றவர்கள் இந்த படத்தை பார்த்து திருந்தியாக வேண்டும். நிச்சயமாக இந்த படம் அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பேசுபொருளாக இருக்கும். அதோடு கர்ணன் படம் அடைந்த புகழை விட ருத்ர தாண்டவம் அதிக புகழை பெறும் என அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |