தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று வலிமை படத்தின் Glimpse வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் காலையிலிருந்து ரசிகர்கள் காத்திருந்து மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் Glimpse வெளியிடப்பட்டது.
இது ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு தொடர்ந்து வலிமை Glimpse ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் யூடியூபில் வெளியான வீடியோக்களில் அதிக லைக்குகள் பெற்ற படங்களின் Glimpse பட்டியல் வெளியாகி அதிலும் வலிமை திரைப்படத்தின் Glimpse தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அந்த பட்டியல்
- வலிமை – 785.3k
- பீம்லா நாயக் – 728k
- ராதே ஷியாம் – 394k
- ப்ளீட்ஸ் ஆப் டேனியல்சேகர் – 360k
- சைரா – 287k
- ஹரி ஹர வீர மல்லு – 219k