Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீங்களும் விண்ணப்பிக்கலாம்…. ஓய்வூதியம் பெறுவதில் சிரமம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடூனில் அமைந்திருக்கிறது. இந்த கல்லூரியில் ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டின் பருவத்தில் சேர்வதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்த விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.ri-mc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்பின் இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அடுத்த மாதம் 30-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 1.7.2022-ஆம் தேதியில் 11 1/2 வயது முதல் 13 வயது அடைந்தவராகவும், ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது ஏழாம் வகுப்பு பயிலுபவராக இருக்கும் அனைத்து முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளும் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனை போல் கலெக்டர் கூறிய மற்றொரு செய்தி குறிப்பில் படைவீரர் சங்கங்களுடன் புதுடெல்லியில் இருக்கும் ராணுவ அமைச்சகம் முன்னாள் படைவீரர் நல துறை செயலாளர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

அதில் முன்னாள் படைவீரர்கள் அவர் தம் மனைவியின் பெயர்களை ஓய்வூதிய கொடுப்பாணையில் பதிவு செய்யாததால், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் சிரமங்கள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நல அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதிய கொடுப்பாணையில் மனைவியின் பெயரை பதிவு செய்யாத முன்னாள் படை வீரர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முன்னாள் படை வீரர்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேலை நாட்களில் ஆஜராகி மனைவியின் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |