மலை ஏறும் வீரர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள கல்ஷசஸ் பகுதியில் எல்பர்ன்ஸ் மலை சிகரம் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகும். இந்த சிகரத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த நிலையில் 19 பேர் கொண்ட குழு ஒன்று எல்பர்ன்ஸ் மலை சிகரத்தில் ஏறியுள்ளது. அப்போது அவர்கள் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்தை அடைந்தபோது திடீரென பனிப்புயல் வீசியுள்ளது.
இந்த பனிப்புயலில் மலை ஏறுபவர்கள் மற்றும் அவர்களுடைய வழிகாட்டிகள் சிக்கியுள்ளனர். மேலும் ஐந்து பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் பனிப்புயலில் சிக்கி காயமடைந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குறிப்பாக காலநிலை மாற்றத்தால் பனிப்புயல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.