தானேவில் 15 வயது சிறுமியை 8 மாதங்களாக 33 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானே மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 33 பேர் கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி டோம்பிவிலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சிறுமியை கடந்த ஜனவரி மாதம் அவரது காதலன் கற்பழித்துள்ளார். அவர் பாலியல் பலாத்காரம் செய்த போது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து வைத்து மிரட்டி அந்த சிறுமியை தனது நண்பர்கள் உறவினர்கள் என்று அனைவருக்கும் விருந்தாக்கியுள்ளார்.
சிறுமியை அவரது காதலியின் நண்பர்கள், கூட்டாளி என 33 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று 4 முதல் 5 முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக இந்த சிறுமி தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு மைனர் வாலிபர் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி எட்டு மாதங்களாக முப்பத்தி மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .