தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குழு கூடி திட்ட செயல்பாடுகள் பற்றிய ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தில் தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணைய வசதி செய்து தரப்பட உள்ளது. இதற்கான திட்ட பணிகளை மேற்கொள்ள எந்த துறையிடமும் அனுமதி பெற தேவையில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.