அக்டோபர் முதல் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கர்நாடகாவிலும் தினசரி தொற்று 1000 கீழ் சரிந்துள்ளது. 852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட் வார் ரூம் அளித்த தகவலின்படி பாசிட்டிவ் விகிதம் 0.6 குறைந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் 100 சதவிகிதம் பார்வையாளர்கள் அனுமதிக்க படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அக்டோபர் முதல் புதிய தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுடன் கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது .அதன்படி வர்த்தக கடைகள் மற்றும் ரீடைல் லைசென்ஸ் வைத்திருக்கும் பரர்கள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.